Thursday, October 3, 2013

LG vs Samsung எல்.ஜி. யா? செம்சுங்கா? : முந்தப்போவது யார்?

எல்.ஜி மற்றும் செம்சுங் நிறுவனங்கள் இம்மாதத்திற்குள் வளைக்கக் கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
LG Z அல்லது Z1 என்ற பெயரில் எல்.ஜி. நிறுவனம் இதனை அறிமுகப்படுத்துமென தெரிகின்றது.
வாழைப்பழத்தைப் போல வளைந்ததாகவும், வித்தியாசமான தோற்றத்திலும் இந்த ஸ்மார்ட் போன் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதுமட்டுமன்றி 6 அங்குல திரையைக் கொண்டதாக இது இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாத இறுதியில் இது அறிமுகப்படுத்தப்படுமெனவும், இதன் தயாரிப்புப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் எல்.ஜி.யைப் போல செம்சுங்கும் மடியக் கூடிய திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் முதலில் எந் நிறுவனம் வளையக் கூடிய ஸ்மார்ட் போனை வெளியிடப்போகின்றது என பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செம்சுங்கின் வளையக் கூடிய ஸ்மார்ட் போன் அடுத்த வாரமளவில் வெளியாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

See More

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

Freelance Jobs
 
© 2011 Tamil Intecs
Designed by The Intecs
Posts RSSComments RSS
Back to top